ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல்நிலை தேர்வுக்கு இலவச விண்ணப்பங்கள்
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல்நிலை தேர்வுக்கு இலவச விண்ணப்பங்கள்:
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., முதல்நிலை தேர்வுக்கு இலவச விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. பூர்த்தி செய்து வருகிற செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ஐ.எ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற குடிமைப்பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 2013 ஆம் ஆண்டு மே, ஜுன் மாதங்களில் நடைபெற உள்ளது. தமிழ் நாட்டைச் சார்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் மற்றும் இதர இனத்தைச் சார்ந்த விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் எழுத்து மூலமான விண்ணப்பத்துடன் கல்வி, வயது, இருப்பிடச்சான்று, குடும்ப அட்டை நகல்கள் மற்றும் சாதி சான்றுகளின் நகல்களை இணைத்து அசல் ஆவணங்களை காட்டி இலவசமாக நுழைவுத்தேர்வு விண்ணப்ப படிவங்களை விருதுநகர் மாவட்ட பிற்பட்டடோர் நல அலுவலர் மூலம் வேலை நாட்களில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யட்பட்ட விண்ணப்பங்களை மீண்டும் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலகத்தில் வருகிற செப்டம்பர் 4 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். அண்ணா இன்ஸ்டியூடிற்கான நுழைவுத்தேர்வு நாள் அக்டோபர் 7 ஆம் தேதி சென்னை, சித்ம்பரம், கோயம்புத்தூர், தர்மபுரி, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, வேலூர், சிவகங்கை ஆகிய தேர்வு மையங்களில் நடைபெறும்.
இதற்கான கல்வித்தகுதி குறைந்த பட்சம் பட்டப்டிப்பு(பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம் மற்றும் தொழிற்பட்ட படிப்பான பி.இ, எம்.பி.பி.எஸ்., பி.வி.எஸ்.சி., பி.எஸ்.சி அக்ரி) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பட்ட படிப்புகள். 1.8.2013 ன் படி விண்ணப்பங்கள் பெற தகுதியுள்ள மாணவ, மாணவிகளின் வயது எஸ்சி(ஏ),எஸ்சி, எஸ்டி -31.7.1978 க்கு பின் 31.7.1992 வரை 21 முதல் 35 வயதிற்குள்ளும், எம்பிசி, பிசி, பிசி(எம்) மற்றும் ஓபிசி 31.7.1980 க்கு பின் 31.7.1992 வரை 21 முதல் 33 வயதிற்குள்ளும், ஓசி-31.7.1983க்கு பின் 31.7.1992 வரை 21 முதல் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
தேவாங்கா டாட் ஆர்க் காக
செய்திக்குறிப்பு.







.jpg)
.jpg)
